Sunday, March 15, 2009

இளம்பெண்ணை நிர்வாண நடனம் ஆட வற்புறுத்திய 4 மாணவிகள் கைது. என்ன கொடுமை சார் இது.

பொதுவா ராக்கிங்ல மாணவர்கள்தான் ரொம்ப மோசமா ஈடுபடுவாங்க. அந்த வரிசைல இப்போ பெண்களும் சேர்ந்துட்டாங்க.என்ன கொடுமை சார் இது.
ஆந்திரா கல்லூரியில், `ராக்கிங்' தொல்லையால் மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக 4 மாணவிகள் மற்றும் விடுதி வார்டன் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பாப்த்லா என்ற இடத்தில் அரசு வேளாண் பொறியியல் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியின் விடுதியில் தங்கி படிக்கும் முதலாம் ஆண்டு மாணவி திரிவேணி (வயது 20), கடந்த சில நாட்களுக்கு முன் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றார். தற்போது, குண்டூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அந்த கல்லூரியில் படிக்கும் 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு மாணவிகள் 5 பேர், திரிவேணியை நீண்டநாட்களாக `ராக்கிங்' செய்து வந்ததும் அவரை நிர்வாணமாக நடனம் ஆடுமாறு வலியுறுத்தியதும் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசில் திரிவேணி புகார் செய்தார். உடனே, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், திரிவேணியை `ராக்கிங்' செய்த மாணவிகள் 4 பேரும் விடுதி வார்டன் சுசிலாவும் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டனர். திரிவேணியால் புகார் கூறப்பட்ட மாணவிகளில் ஒருவர் விடுதியை விட்டு ஓட்டம் பிடித்ததால் அவரை போலீசார் தேடி வருகின்றனர். மாணவிகள் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் திரண்டு வந்து பாப்த்லா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

`ஒட்டு மொத்த சம்பவமும் கல்லூரியின் உள் விவகாரம். திரிவேணியை போலீசார் கட்டாயப்படுத்தி புகார் வாங்கி உள்ளனர். எனவே, அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்' என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், மாணவிகள் மற்றும் விடுதி வார்டனை விடுவிக்காவிட்டால் தீவிர போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தனர். எனவே, கல்லூரி, விடுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருப்பதாக மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாத் தெரிவித்தார்.

இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி திரிவேணியின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் காணப்படுகிறது. அவர், முழுமையாக குணமடைய இன்னும் 3 வாரங்கள் ஆகும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

தேர்தலில் தனித்து போட்டி: மாயாவதி அறிவிப்பு

தேமுதிகவுக்கு நான் அழைப்பு விடுக்கவில்லை : கருணாநிதி


மேலும் பயனுள்ள கட்டுரைகள்,கதை, கவிதைகளைப் படிக்க தமிழ்குறிஞ்சிக்கு வாருங்கள்.

3 comments:

Raju said...

சரித்தேன்....ஆணுக்கு பெண் சமம்தேன்....

நாமக்கல் சிபி said...

/சரித்தேன்....ஆணுக்கு பெண் சமம்தேன்....//

:)

k.veeramuni said...

நாகரீகத்திலிருந்து காட்டுமிராண்டித்தனம் நோக்கிப்போகிறோம்
இப்படிக்கு
www.aanmigakkadal.blogspot.com
www.online-astrovision.blogspot.com

Tamilkurinji.com news

JustAds.co.in - Free Classifieds , Post Free Ads, Best Classified - Most recent ads