Wednesday, January 30, 2008

ஆணுறை வாங்க வெட்கப்படலாமா?


நேற்றைய தினத்தந்தியில் ஒரு செய்தி பார்த்தேன். சிலி கடற்கரையில் ஈருடையில் (டூ பீஸ்) சூரிய குளியலில் இருந்த பெண்களிடம் ஒரு சேவை அமைப்பைச்சேர்ந்தவர்கள் ஆணுறை போன்ற உடையணிந்து ஆணுறையின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்து இலவசமாக ஆணுறைகளை விநுயோகித்தார்களாம். இது போல் நம் ஊர் மெரினா கடற்கரையில் காதலனுடன் காற்று வாங்கும் பெண்களிடம் சென்று ஆணுறையின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்க முடியுமா?.


என் நண்பர் ஒருவரிடம் இதுகற்றி பேசிய போது "அட போப்பா மருந்துக்டைல போயி காண்டம்னு கேட்கவே வெட்கமா இருக்கு"


"இதுல என்ன வெட்கம்?"


"நான் காண்டம் வாங்க சில விதி முறைகள் வச்சிருக்கேன் தெரியுமா?"


"இதுக்குக் கூட விதிமுறைகளா?"


"ஆமா நான் காண்டம் வாங்கப்போகும் கடைல கடைக்காரன் மட்டும் உட்கார்ந்து தேமேனு தெருவை வேடிக்கை பார்த்திட்டிருக்கனும்"


"புரியலயே?"


"அட என்னப்பா நீ இது கூட புரியலன்ற? கடைல வேற யாரும் மருந்து மாத்திரை வாங்கிக்கிட்டு இருக்கக்கூடாது"


"ஓ... அப்புறம்?"


"பெண்கள் வேலை பார்க்காத மருந்துக்கடையா இருக்கனும்"


" ஓ பொண்ணுங்க கிட்டப் போய் காண்டம்னு கேட்க வெட்கம்"


"ஆமா"


"அப்புறம்"


"கடைல நிறையப்பேர் வேலை பார்க்கக் கூடாது"


"ஏன்?"


"நாம போன உடனே எல்லாரும் நம்மளையே பார்ப்பானுக. ஒருத்தன் என்ன சார் வேணும்பான்? ரெண்டு குரோசின் குடுனு சத்தமா கேக்கற மேட்டரா இது. நான் ரகசியமா காண்டம் ஒரு பாக்கெட் குடும்பேன். பக்கத்துல இருக்கறவன் நம்மளை ஒரு மாதிரியா
பார்ப்பான். நமக்குக் கூச்சமா இருக்கும். எதுக்கு இந்த வம்புன்னுதான் தனியாளா இருக்கற கடையா பார்த்து வாங்கறது."


"ம்...... அப்புறம்"


"நாம குடியிருக்கற ஏரியாவுல வாங்கக்கூடாது"


"ஏன்?"


"மறு நாள் காலைல பொண்டாட்டியோட அவன் கடைய தாண்டிப்போகும் போது சங்கடமா இருக்கும்"


"ம்.."


"ஒரே கடைல தொடர்ந்து வாங்கக்கூடாது?"


"ஏன்?"


"ஒரு மாசத்துக்கு எத்தனை வாங்கறோம்னு தெரிஞ்சுருமே. அப்புறம் ரெண்டும் ரெண்டும் நாலுனு கணக்குப் போட்டுருவான்ல"


"ம்......அப்புறம்"


"அப்புறம் என்ன? அவ்வளவுதான்"


" இல்லை இதுல வேற ஏதாவது பிரச்சனை இருக்கானு?"


சிறிது நேரம் யோசித்தவர் தொடர்ந்தார்.


"ஒரு பெரிய பிரச்சனை இருக்கு"


"என்ன அது?"


"நாம கடைக்குப் போனதும் அவசரமா காண்டம் ஒரு பாக்கெட் குடுப்பானு கேட்போம்"


"என்ன அவசரம்"


"நாம வாங்கறத வேற யாரும் பார்த்திரக் கூடாதே?"


"ஓ........."


"அவன் கடைல உள்ள தள்ளி ரகசியமா வெச்சிருப்பான். அதுல ஒரு பாக்கெட் எடுத்து அங்கயே ஒரு கவர்ல போட்டு கொண்டு வந்து குடுப்பான். அவசரமா வாங்கி பாக்கெட்ல போட்டுக்கிட்டு எவ்வளவுனு கேட்டு குடுத்துட்டு உடனே இடத்தை காலிபண்ணிருவோம்"


"இதுல என்ன பிரச்சனை இருக்கு?"


"அவன் என்ன பிராண்டு தர்ரான்? அதோட விலை என்ன? காலாவதி ஆனதா ஆகாததானு எதுவும் பார்க்க முடியாது. ரிப்டு, டாட்டடு, எக்ஸ்ட்ரா டைம்னு என்னனென்னமோ வருது. அதெல்லாம் வாங்கி யூஸ் பண்ணிப்பார்க்கணும்னு ஆசைதான். எங்க கேட்க முடியுது"


காண்டம் வாங்க ஆண்களே இவ்வளவு வெட்கப்படர நாட்டுல பெண்களிடம் இது பற்றி பிரச்சாரம் செய்ய முடியுமா?


அது போகட்டும். எனக்கொரு யோசனை.


எது எதுக்கோ Exclusive show room திறக்கராங்களே, ஏன் இதுக்காக ஒரு Exclusive show room திறக்கக் கூடாது?. நம்ம வெட்கப்படற மக்களும் 'சே..... இதுக்குனு தனியா ஒரு கடையே திறந்திருக்கான் இன்னும் நாம ஏன் வெட்கப்படனும்னு' தைரியமாக உள்ளே சென்று தங்களுக்கு விருப்பமானதைக் கேட்டு வாங்கிக் கொள்வார்களே. மக்களே இது பற்றி உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

தமிழர் மானத்தை கப்பலேற்றும் தமிழச்சிகள்.


இன்று காலை தினத்தந்தியில் இந்தசெய்தியைப் படித்து அதிர்ந்தேன்.


"அவன்கிட்ட அப்படி என்னடி காணாதத கண்டுபுட்டீங்க"

Saturday, January 26, 2008

நாறிப்போனது.........?

கள்ளக்காதல் எதிரொலி
கணவன் கொலை
மனைவி கைது.

மணமான முன்று நாளில்
மணப்பெண் மாயம்
மாஜி காதலனை
போலீஸ் தேடுகிறது.

கள்ளக் காதலனுடன்
சல்லாபத்தில் இருந்த மனைவி
கண்ணால் கண்ட ஆத்தித்தில்
மனைவியைக் கொன்ற
கணவன் கைது.

செய்திகள் படித்து
சாக்கடையான மனதில்
எதிர் வீட்டுத் திருமதி
கல் எறிந்தாள்
நாறிப்போனது மனது.

நாளைய செய்திக்கு
நானும் தயாரானேன்.

Wednesday, January 16, 2008

இது PIT போட்டிக்காக அல்ல.

இது அடுத்த மாத PIT போட்டிக்கான முன் முயற்சி.

தேறுமா CVR சார்?.

Monday, January 14, 2008

பொங்கல் வாழ்த்து

உலகத் தமிழர்கள் அனைவருக்கும் நக்கீரனின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.

Monday, January 07, 2008

சிறந்த நச் கதை

சிறந்த நச் கதையாக தேர்வுபெற்றுள்ள சென்னைக் காதலும், திருச்சிக் காதலும் வாழ்க. வெற்றி பெற்ற திரு.அருட்பெருங்கோவுக்கு வாழ்த்துக்கள்.
எந்த அரசியல் குறுக்கீட்டிற்கும் இடம் கொடாமல் நேர்மையான முறையில் சிறந்த கதையை தேர்வுசெய்த வாக்காள பெருமக்களுக்கும், நடுவர்களுக்கும் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் திரு.சர்வேசன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இது போன்ற போட்டிகள்தான் என்ன எழுதுவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் என்போன்ற புதியவர்களுக்கு ஊக்க மருந்தாக இருக்கிறது.(ஒரு சந்தேகம் ஊக்க மருந்து உட்கொண்டு இது போன்ற போட்டிகளில் கலந்து கொள்ளலாமா?)
தொடர்ந்து சர்வேசன் இதுபோன்ற போட்டிகளை நடத்தவேண்டும்.
யோவ்... சர்வேசன் பதிவுல பின்னூட்டமா போடவேண்டியத பதிவாப் போட்டு ஜல்லியடிக்கிறியா?னு யாரும் கேட்ராதீங்க. ஆனானப்பட்ட லக்கிலுக்கே கலைஞரே இது நியாயமா?னு ஒரு போட்டோவைப் போட்டு
புலம்பும் போது நான்லாம் ஜீஜீபிங்க.

Tamilkurinji.com news

JustAds.co.in - Free Classifieds , Post Free Ads, Best Classified - Most recent ads