Wednesday, December 12, 2007

கலைஞரே இது நாயமா?

இன்னாப்பா இது அநியாயமா கீது.
இலவசமா டிவி பொட்டி தர்ரேன்னு சொன்னதாலதான
ஓட்டுப்போட்டோம்.இப்போ டிவிய வித்தா குண்டாஸ்ல
போட்டுருவோம்னா இன்னாபா நாயம்.
சென்னைல டிவிபொட்டி இல்லாத குடிசை
ஏதாவது கீதாபா. குந்த எடம் கீதோ இல்லையோ
அங்க டிவிபொட்டிகீது. குடிக்க கஞ்சி கீதோ இல்லையோ
கந்துவட்டிக்கு கடன்வாங்கியாவது கலர்டிவி வாங்கி
வச்சுக்கறோம்.(இதுக்கு மேல ராயபுரம் 'கடுக்கா' ராசுவோட
சென்னை தமிழ் எனக்கு வரலைங்க) இதுக்கு மேல
இலவச கலர்டிவிய வாங்கி நாங்க எங்க வச்சுக்கறது.
அதை அடிதடி போட்டு வாங்கறது
இன்னாத்துக்கு. சேட்டு கடைல வைக்கறதுக்கோ
இல்லாங்காட்டி விக்கறதுக்கோதான். இப்போ இந்த
டிவி பொட்டிய பாத்தா ஆசைவரல ஆத்திரம்தான்
வருது. ஆத்திர அவசரத்துக்கு அடமானம் வைக்கக்கூட
முடியாத பொருளை எதுக்கு அடைகாத்து வச்சிருக்கனும்னு
தோணுது.ஒரு நேரம் பத்தா ஏதோ கடத்தல் பொருளை
குடிசைக்குள்ள பதுக்கி வச்சிருக்க மாதிரி பயமாக்கூட இருக்குப்பா.
அதைப்பாத்தாலே குண்டாஸ் ஆக்ட்டும் புழல் ஜெயிலும்தான்
ஞாபகத்துக்கு வருதுப்பா.
கலைஞரய்யா இது நாயமா?

Friday, December 07, 2007

கருணாநிதியும் கருப்புக் கண்ணாடியும்.

தமிழ்நாட்டில் கார்களுக்கு கருப்புக்கண்ணாடி போட (colour film ஒட்ட) தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வாகனங்களுக்குள் நடைபெறும் சமூகவிரோத செயல்கள் தடுக்கப்படுமாம்.
இது VIP கார்களுக்குப் பொருந்துமா என்று தெரியவில்லை?
கருணாநிதி கருப்புக்கண்ணாடி அணிந்திருப்பதால்தான் நாட்டில் நடக்கும்
சமூகவிரோத செயல்கள் அவருக்கு தெரிவதில்லையோ?
அப்ப அவரும் கண்ணாடிய கழட்டிருவாரா?

Tuesday, December 04, 2007

சென்னையில் மாணவ ரெளடிகள்!

சம்பவம்: 1
சென்னை அரும்பாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் +1, +2 மாணவர்களுக்கு இடையே
நடந்த கிரிக்கெட் போட்டியில் மோதல் ஏற்பட்டு அடிதடி நடந்துள்ளது. மோதலில் ஈடுபட்ட
மாணவர்கள் பெற்றோரை அழைத்து வரவேண்டும் என்று பள்ளி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே மீண்டும் மாணவர்களிடையே அடிதடி நடந்துள்ளது.
தகராறில் ஈடுபட்ட மாணவர்களை வரிசையாக நிற்கவைத்து ஆசரியர்கள் பிரம்பால்
அடித்துள்ளனர். அடிபட்ட மாணவர்கள் காவல்துறை ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம்: 2
சென்னை திருவெற்றியூரில் காலை பிரேயரின்போது நகம்வெட்டிக்கொண்டிருந்த
மாணவனைக் கண்டித்த ஆசிரியரை அந்த மாணவன் தாக்கியுள்ளான்.

நான் படித்தகாலத்தில் படிக்காத முரட்டு பிள்ளைகளை பள்ளியில் கொண்டு
விடும் பெற்றோர் "வாத்தியாரய்யா எம்மவன் ஒழுங்கா படிக்கலைனா
அடிச்சு தோலை உறிச்சுருங்க" என்று சொல்லி விட்டுச்செல்வர்.
எனது கணக்கு வாத்தியார் (பெயர் நடராஜ் என்று ஞாபகம்) கணக்கை
தவறாகப்போட்டால் பிரம்பால் பிருஸ்டத்தில் அடிப்பார். (அவரது வகுப்பு
இருக்கும் நாட்களில் அடிதாங்குவதற்காக ஒன்றின்மேல் ஒன்றாக இரண்டு
டவுசர்கள் அணிந்து செல்வோம் என்பது தனிக்கதை) ஆனால் ஒருநாளும்
ஆசியர் அடித்ததாக பெற்றோரிடம் புகார் செய்ததில்லை.புகார் செய்தால்
ஏன் படிக்கவில்லை என்று வீட்டிலும் அடிவிழும்.
அந்தக்காலத்தில் ஆசிரியர்கள் மீது ஒரு பயம்கலந்த மரியாதை இருந்தது.
இன்று ஆசிரியர் அடித்தால் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கலாம்,
ஆசிரியர் கைதுசெய்யப்படலாம் என்ற நிலைமை உள்ளது.
இதன் விளைவு ஆசிரியர் மீது பயமோ, மரியாதையோ இருக்காது.
ஆசிரியரும் கடமைக்கு கரும்பலகையில் எழுதிப்போட்டுவிட்டுச்
செல்வாரேயானல் நமது வருங்கால சந்ததியின் எதிர்காலம் என்னாகும்?
கண்டித்த ஆசிரியரையே ஒருமாணவன் திருப்பித்தாக்குகிறான் என்றால்
அவனுக்கு அந்த தைரியம் எங்கிருந்து வந்தது?
நாங்கள் தவறு செய்வோம் ஆனால் எங்களை யாரும் கண்டிக்கவோ,
தணடிக்கவோ கூடாது என்றால் யார் இவர்களைத்திருத்துவது?

எச்சரிக்கை:
நாம் ஒரு பொறுப்பற்ற பொறுக்கிகள் நிறைந்த சமூகத்தை உருவாக்கிக்
கொண்டிருக்கின்றோம்.இதன் பின்விளைவுகள் மிகமோசமாக இருக்கும்.

Saturday, December 01, 2007

வீட்டில்....? யாருமில்லை.

அது ஒரு மழைநாள் இரவு.
ஆளரவமற்ற தெரு
மெலிதான தூரலில்
நனைந்த கோழியாய்
நான் நடக்கின்றேன்.

மழை வலுத்தது குளிர் வாட்டியது
உன் இல்லம் என்பதறியாமல்
ஒதுங்கினேன்.

ஜன்னல் வழியே கசிகின்றது
மல்லிகை வாசம்.

திரும்பிப் பார்த்தேன்
ஒளிரும் நிலவாய்
உன் முகம்.

"யாரது?"
அதிகார வார்தையை
அன்பாய் பிரயோகித்தாய்.

"கனமான மழை
அதனால் ஒதுங்கினேன்"

"ஏன் நனைகிறீர்கள்
உள்ளே வாருங்கள்"

கதவு திறந்தாய்
ஒற்றை மெழுகுவர்த்தியின்
ஒளியில் உன் வடிவம் கண்டேண்.
என் தொண்டைக்குழியில்
எதுவோ அடைத்தது.

"வீட்டில்.....?"

"யாருமில்லை"

தயங்கினேன்

"பரவாயில்லை வாருங்கள்"

உள்ளே வந்தேன்.

"அமருங்கள்"

எதையோ எடுக்க உள்ளே சென்றாய்
காற்றின் வேகத்தில்
கதவு தானாய் மூடிக்கொண்டது.
எனக்குள்
எதுவோ திறந்து கொண்டது.

எரிந்த மெழுகு வர்த்தியும்
அணைந்த சில நொடிகளில்
என்காதருகே உன் மூச்சுக்காற்றின்
வெப்பம் உணர்ந்தேன்.

நம் இருவருக்குள்ளும்
பற்றிக்கொண்டது நெருப்பு.
நான் என் நினைவிழந்தேன்.

விடியலில் நான் விழித்தபோது
என் வீட்டிலிருந்தேன்.

நேற்றிரவு நடந்தது
நிஜமா? கனவா?
குழம்பிப்போனேன்.

உன் வீட்டைத்தேடி ஓடி வந்தேன்
பூட்டுத் தொங்கியது.

அருகிலிருந்தவரிடம் கேட்டேன்.

"இங்கே இருந்தவர்கள்?"

"தம்பி ஊருக்குப்புதுசா?"

"ஆம்"

"இங்கே இருந்த இளம்பெண்
ஏனோ தெரியவில்லை
மூன்று மாதம் முன்பு
துக்கில் தொங்கி விட்டாள்
பாவம்" என்றார்.

வீட்டில்....? யாருமில்லை.

அது ஒரு மழைநாள் இரவு.
ஆளரவமற்ற தெரு
மெலிதான தூரலில்
நனைந்த கோழியாய்
நான் நடக்கின்றேன்.

மழை வலுத்தது குளிர் வாட்டியது
உன் இல்லம் என்பதறியாமல்
ஒதுங்கினேன்.

ஜன்னல் வழியே கசிகின்றது
மல்லிகை வாசம்.

திரும்பிப் பார்த்தேன்
ஒளிரும் நிலவாய்
உன் முகம்.

"யாரது?"
அதிகார வார்தையை
அன்பாய் பிரயோகித்தாய்.

"கனமான மழை
அதனால் ஒதுங்கினேன்"

"ஏன் நனைகிறீர்கள்
உள்ளே வாருங்கள்"

கதவு திறந்தாய்
ஒற்றை மெழுகுவர்த்தியின்
ஒளியில் உன் வடிவம் கண்டேண்.
என் தொண்டைக்குழியில்
எதுவோ அடைத்தது.

"வீட்டில்.....?"

"யாருமில்லை"

தயங்கினேன்

"பரவாயில்லை வாருங்கள்"

உள்ளே வந்தேன்.

"அமருங்கள்"

எதையோ எடுக்க உள்ளே சென்றாய்
காற்றின் வேகத்தில்
கதவு தானாய் மூடிக்கொண்டது.
எனக்குள்
எதுவோ திறந்து கொண்டது.

எரிந்த மெழுகு வர்த்தியும்
அணைந்த சில நொடிகளில்
என்காதருகே உன் மூச்சுக்காற்றின்
வெப்பம் உணர்ந்தேன்.

நம் இருவருக்குள்ளும்
பற்றிக்கொண்டது நெருப்பு.
நான் என் நினைவிழந்தேன்.

விடியலில் நான் விழித்தபோது
என் வீட்டிலிருந்தேன்.

நேற்றிரவு நடந்தது
நிஜமா? கனவா?
குழம்பிப்போனேன்.

உன் வீட்டைத்தேடி ஓடி வந்தேன்
பூட்டுத் தொங்கியது.

அருகிலிருந்தவரிடம் கேட்டேன்.

"இங்கே இருந்தவர்கள்?"

"தம்பி ஊருக்குப்புதுசா?"

"ஆம்"

"இங்கே இருந்த இளம்பெண்
ஏனோ தெரியவில்லை
மூன்று மாதம் முன்பு
துக்கில் தொங்கி விட்டாள்
பாவம்" என்றார்.

Tamilkurinji.com news

JustAds.co.in - Free Classifieds , Post Free Ads, Best Classified - Most recent ads