Tuesday, March 17, 2009

போடுங்கம்மா ஓட்டு ஜாதகத்தை பார்த்து

ஐயாமாரே அம்மாமாரே ஆட்சி கட்டிலில் அமரும் அளவுக்கு உங்கள் ஜாதகம் பலமாக இருந்தால் அ.தி.மு.க வுல சீட் கேட்டு ஒரு அப்ளிகேஷன் போடுங்க.சீட்டு நிச்சயம் உண்டு.

எச்சரிக்கை..

அம்மாவுக்கே ஆப்பு வைக்கும் அளவுக்கு அதாவது பிரதமராகவோ, முதல்வராகவோ ஆகும் அளவுக்கு உங்கள் ஜாதகம் பலமாக இருந்தால் உங்கள் ஆயுள் ரேகையை சரிபார்த்து கொள்ளுங்கள். ஆட்டோவில் ஆள் வரலாம்.
போடுங்கம்மா ஓட்டு ஜாதகத்தை பார்த்து.

இந்த கூத்தை பற்றி விரிவாக தெரிஞசிக்க இங்க போங்க .

Sunday, March 15, 2009

இளம்பெண்ணை நிர்வாண நடனம் ஆட வற்புறுத்திய 4 மாணவிகள் கைது. என்ன கொடுமை சார் இது.

பொதுவா ராக்கிங்ல மாணவர்கள்தான் ரொம்ப மோசமா ஈடுபடுவாங்க. அந்த வரிசைல இப்போ பெண்களும் சேர்ந்துட்டாங்க.என்ன கொடுமை சார் இது.
ஆந்திரா கல்லூரியில், `ராக்கிங்' தொல்லையால் மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக 4 மாணவிகள் மற்றும் விடுதி வார்டன் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பாப்த்லா என்ற இடத்தில் அரசு வேளாண் பொறியியல் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியின் விடுதியில் தங்கி படிக்கும் முதலாம் ஆண்டு மாணவி திரிவேணி (வயது 20), கடந்த சில நாட்களுக்கு முன் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றார். தற்போது, குண்டூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அந்த கல்லூரியில் படிக்கும் 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு மாணவிகள் 5 பேர், திரிவேணியை நீண்டநாட்களாக `ராக்கிங்' செய்து வந்ததும் அவரை நிர்வாணமாக நடனம் ஆடுமாறு வலியுறுத்தியதும் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசில் திரிவேணி புகார் செய்தார். உடனே, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், திரிவேணியை `ராக்கிங்' செய்த மாணவிகள் 4 பேரும் விடுதி வார்டன் சுசிலாவும் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டனர். திரிவேணியால் புகார் கூறப்பட்ட மாணவிகளில் ஒருவர் விடுதியை விட்டு ஓட்டம் பிடித்ததால் அவரை போலீசார் தேடி வருகின்றனர். மாணவிகள் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் திரண்டு வந்து பாப்த்லா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

`ஒட்டு மொத்த சம்பவமும் கல்லூரியின் உள் விவகாரம். திரிவேணியை போலீசார் கட்டாயப்படுத்தி புகார் வாங்கி உள்ளனர். எனவே, அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்' என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், மாணவிகள் மற்றும் விடுதி வார்டனை விடுவிக்காவிட்டால் தீவிர போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தனர். எனவே, கல்லூரி, விடுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருப்பதாக மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாத் தெரிவித்தார்.

இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி திரிவேணியின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் காணப்படுகிறது. அவர், முழுமையாக குணமடைய இன்னும் 3 வாரங்கள் ஆகும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

தேர்தலில் தனித்து போட்டி: மாயாவதி அறிவிப்பு

தேமுதிகவுக்கு நான் அழைப்பு விடுக்கவில்லை : கருணாநிதி


மேலும் பயனுள்ள கட்டுரைகள்,கதை, கவிதைகளைப் படிக்க தமிழ்குறிஞ்சிக்கு வாருங்கள்.

Thursday, March 12, 2009

உயிரோடு விளையாடும் சமையல் எரிவாயு நிறுவனங்கள்

பயன்பாட்டுக்கு தகுதியில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தும்போது விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது
ஆனால் சமையல் எரிவாயு நிறுவனங்கள். அதைபற்றி கவலைபடுவதாக தெரியவில்லை. அவை பெரும்பாலும் காலாவதியான சிலிண்டர்களிலேயே மீண்டும் மீண்டும் எரிவாயுவை நிரப்பி அனுப்புகின்றன .

உங்கள்வீட்டில் உள்ள சிலிண்டர் காலாவதியானதா இல்லையா என்பதை எப்படி அறிந்து கொள்வீர்கள்?

சிலிண்டர்களின் மேல்பக்கம் இருக்கும் முன்று கம்பிகளில் ஒன்றில் சிலிண்டர் காலாவதியாகும் மாதம் மற்றும் வருடம் குறிப்பிடபட்டிருக்கும் . கீழே உள்ள படத்தில் உள்ளது போல் A அல்லது B அல்லது C அல்லது D என்ற ஆங்கில எழுத்துடன் ஒரு
இரண்டிலக்க எண் {D-06} குறிப்பிடப் பட்டிருக்கும்

1. A - என்பது மார்ச் {முதல் காலாண்டு}

2.B - என்பது ஜுன் {இரண்டாவது காலாண்டு}

3.C - என்பது செப்டம்பர் {மூன்றாவது காலாண்டடு}

4. D -என்பது டிசம்பர் {நான்காவது காலாண்டடு}

அதாவது D-O6 என்பது டிசம்பர் 2006 என்பதை குறிக்கிறது.
கீழே உள்ள படத்தில் D-13 என்பது டிசம்பர் 2013 ஐக் குறிக்கிறது.


அடுத்த முறை சிலிண்டர் வாங்கும்போது காலாவதி தேதியை பார்த்து வாங்குங்கள். காலாவதியான சிலிண்டர்களை திருப்பி அனுப்புங்கள்.

உங்கள் வீட்டிற்கான இம்மாத மின்கட்டணம் எவ்வளவு என்று தெரிய வேண்டுமா?

Monday, March 09, 2009

அம்மா உண்ணாவிரதம் நாடகமாம் ஐயா சொல்றார்

அம்மா உண்ணாவிரதம் நாடகமாம் ஐயா சொல்றார். அப்ப உங்க கட்சி எம்.பிக்கள் ராஜினாமா பண்றேன்னு சொன்னது என்னவாம்?
மொத்தத்துல தேர்தல் காய்ச்சல்ல எல்லாரும் நடுங்க ஆரம்பிச்சுட்டாங்க. அது சரி அம்மா நாடகத்துக்கு ஐயா என்ன வசனம் எழுதியிருக்காருனு பார்க்க வேணாமா? அதுக்கு இங்க போங்க

Sunday, March 08, 2009

பெங்களூர் அருகே பண்ணை வீட்டில் நடனத்துடன் மது விருந்து: 110 பேர் கைது

பெங்களூர் அருகே பண்ணை வீட்டில் நள்ளிரவு நடனத்துடன் நடந்த மது விருந்தில் பங்கு கொண்ட 20 பெண்கள் உள்பட 110 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராம்நகர் மாவட்டத்தில் சுஞ்சனகுப்பே அருகே தொட்ட ஆலதமரா என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள ஒரு பண்ணை வீட்டில் சனிக்கிழமை நள்ளிரவு இளம் பெண்களும், ஆண்களும் கும்பலாக அதிக சப்தத்துடன் பாடல்களைப் போட்டு மது அருந்தி நடனமாடிக்கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதை அடுத்து ராமநகரம் மாவட்ட தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். குறிப்பிட்ட கிராமத்தில் ஒதுக்குப் புறத்தில் உள்ள பண்ணை வீட்டில் போலீசார் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, இளம் பெண்களும், ஆண்களும் அரைகுறை ஆடையணிந்து மது போதையில் மேற்கத்திய பாடல்களுக்கு நடனமாடிக்கொண்டு இருந்தனர். மேலும்.......


இலங்கைத் தமிழர் போராட்டத்தை ஆதரிக்கிறோம்: ஜெயலலிதா


வழக்கறிஞர்களும், காவல்துறையினரும் இரு கண்கள்: கருணாநிதி

Saturday, March 07, 2009

இலங்கை ராணுவத் தாக்குதலில் பொதுமக்கள் 32 பேர் பலி

வன்னிப் பகுதியில் இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 32 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வன்னி அருகேயுள்ள இரணைப்பாலை, மாத்தளன் ஆகிய இடங்களில் இலங்கை ராணுவம் நேற்று அதிகாலை முதல் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது. இதில், பொதுமக்களில் 32 பேர் கொல்லப்பட்டதாகவும் 64 பேர் காயமடைந்ததாகவும் புலிகள் ஆதரவு இணையதளங்களில் வெளியாகியுள்ளன.

இத்தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 26 பேர் கொல்லப்பட்டதாகவும், 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மேலும்.......


கூட்டணியில் "சிண்டு'' முடிய ஜெய‌ல‌லிதா முயற்சி : கருணா‌நி‌தி


ஜெயலலிதா உண்ணாவிரதம் மார்ச் 9-க்கு மாற்றம்

Tamilkurinji.com news

JustAds.co.in - Free Classifieds , Post Free Ads, Best Classified - Most recent ads