Monday, December 05, 2005

மீண்டும் புயல்..... சுனாமியே காரணம்?

சென்னையை தாக்க அடுத்த புயல் தயாராகிவிட்டது. அந்தமானுக்கு அருகே
மையம் கொண்டுள்ளது. இதற்குக் காரணம் சுனாமிதான் என்கிறார்
பேராசிரியர் மணிமாறன். காண்க "சுனாமியே காரணம்"

Wednesday, November 16, 2005

என் மகளின் பாய்ஃபிரண்டுக்கு.

நம் தமிழர்களின் உணர்ச்சிமிகு போராட்டம்? கண்டு நான் புளாகாங்கிதம் அடைந்தேன். போராட்டம் நடத்தும் எத்தனை பேர் இந்தியா டுடேவை பார்த்திருப்பார்கள் அல்லது படித்திருப்பார்கள்?.
குஷ்பு சொன்னதன் முழு அர்த்தம் இவர்களுக்கு தெரியுமா?.
சில தினங்கள் முன்பு ஒரு தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பில் பிறந்தநாள் வாழ்த்து நிகழ்சிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒரு பெண்மணி "இன்று எனது மகளின் பாய் ஃபிரண்டுக்கு பிறந்த நாள் அவருக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்று அவருக்கு ஒரு திரைப்படப் பாடலையும் அர்பணித்தார். நிகழ்ச்சி நடத்தியவர் அடுத்து "உங்கள் மகள் எங்கே? அவரைப் பேசச் சொல்லுங்கள்" என்று கேட்டிருந்தால் அந்தத் தாய் "என் மகள் தன் பாய் ஃபிரண்டுடண் கோவிலுக்கு? சென்றுள்ளாள்"என்று கூறியிருப்பார். "தப்பு செய்யரது தப்பில்லை, தப்பை தப்பில்லாமல் செய்யுங்கள்" என்று குஷ்பு இவர்களுக்காகத்தான் சொன்னார். தகவல் தொழில் நுட்பத்தின் அபார வளர்ச்சியால் நமது நாடும், நமது நாகரீகமும், பண்பாடும், பழக்க வழக்கங்களும் நிறைய....... நிறைய...... மாறிவிட்டது. குஷ்பு நிச்சயமாக விளம்பரத்துக்காக பேட்டி கொடுக்கவில்லை. குஷ்புவிற்கு விளம்பரமும் தேவையில்லை. குஷ்புவின் "ஜாக்பாட் ஜாக்கெட்" கொடுக்காத விளம்பரத்தையா இந்தியா டுடே கொடுத்து விடப்போகிறது.
இப்போது செருப்பும், விளக்குமாறும் எடுத்துப் போராடத் தூண்டி விடுகிறார்களே அவர்களுக்குத்தான் விளம்பரம் தேவை. இந்தப்போராட்டத்தில் பொது ஜனம் யாரும் கலந்து கொள்ளவில்லை.குறிப்பிட்ட இயக்கத்தின், கட்சியின் "விசுவாச" தொ(கு)ண்டர்கள்தான் போராட்டம் நடத்துகிறார்கள். இது யாரையோ, எதற்கோ பழிவாங்க, யாரையோ திருப்திபடுத்த நடத்தப்படும் போராட்டம் என்பது பொது ஜனத்திற்கு நன்றாகவே தெரியும்.

Monday, November 07, 2005

கவிஞர் காத்தவராயன் கவிதை - 1



வாராது வந்த மாமழையே!
வணங்குகிறேன்.

நீரி(யி)ன்றி நாவரண்டு
நின்றோம்!

பூவாய் தூறினாய்! புயலாய் மாறினாய்!
தலைமூழ்கி தவிக்கின்றோம்.

கொட்டித் தீர்த்தது போதும்கொஞ்சம்
ஓய்வெடுத்துக்கொள்.

வாராது வந்த மாமழையே!
உன் வருகைக்கு
நன்றி சொல்ல
நான் உயிரோடிருக்க வேண்டும்.

Friday, November 04, 2005

பாக்கெட்டில், பாக்கெட் வைத்து!

கராத்தே தியாகராஜன் கைதாவாரா? என்ற கேள்விக்கு அரசு வழக்கறிஞராவது பதில் சொல்லி பத்து வராகன் பரிசை பெற்று விடுவார் என்று பார்த்தால் அவரும் ஏமாற்றி விட்டார்.பாவம் அவருக்கு மட்டும் தெரியுமா என்ன?.
உன் மீது வழக்கு எதுவுமில்லை என்று சொன்னால் கராத்தே வெளியே வருவார், அப்போதுஅவரது பாக்கெட்டில், பாக்கெட் வைத்து (அதாங்க கஞ்சா பொட்டலம்) உள்ளே தள்ளிவிடலாம் என்று நினைக்கிறார்கள் போலும்?கராத்தே கைதாவாரா? இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்கள் இருவர் மட்டுமே.
ஒருவர் கடவுள்.
மற்றவர் ...................?
கோடிட்ட இடத்தை நிரப்புக.

Thursday, November 03, 2005

பத்து வராகன் பரிசு!

கராத்தே தியாகராஜன் கைதாவாரா?
கராத்தே மேல் வழக்கு உள்ளதா? இல்லையா?
உண்மையில் கராத்தே எங்கு உள்ளார்?
இந்த கேள்விகளுக்கு சரியான பதில் சொன்னால்
பத்து வராகன் பரிசு!

பதில் சொல்லுங்க...பிளீஸ்

இந்த பாமரன் கேள்வி கேட்டு ஒரு மாசத்துக்கு மேலாகுது
இது வரை எந்த புண்ணியவானும் பதில் சொல்லல.
யாராவது பதில் சொல்லுங்க...பிளீஸ்.

Thursday, September 22, 2005

பாமரன்கேள்விகள்?...2

இன்னொரு தினசரி செய்தி:பெண் போலீஸ் அதிகாரிகளின் பயிற்சி மையத்தில் பாலியல் கொடுமைகளை தடுக்க ரகசிய கேமராபொருத்தப் போராங்களாம்?
சந்தேகம் 1:- சொல்லீட்டு செஞ்சா தப்புபண்றவன் உஷாராயிர மாட்டானா?சந்தேகம் 2:- பெண் போலீஸ் பயிற்சி பண்ணும் போது ரகசியமா கேமரா மூலமா பார்த்து ரசிக்க மாட்டங்களா?
சந்தேகம் 3:- ஆமா...... காவல் காக்க போறவங்க, காவல் காக்கறவங்க நெலமயே இப்படி இருந்தா அப்பாவி பொதுசனதை யார் காப்பத்தரது?

பாமரன்கேள்விகள்?

தினசரிகளில் வரும் சில செய்திகள் இந்த பாமரனுக்கு புரிவதில்லை.உ.ம்: சின்ன மருத்துவர் டெல்லியில் வெளியிட்ட ஆண்டறிக்கையில் இந்தியை வளர்ப்போம் என்றாராம். பெரிய மருத்துவர் சென்னையில் தமிழை வளர்ப்போம் என்று சிறை நிரப்புகிறாராம்?உங்களுக்கு ஏதாவது புரியுதா?

Tamilkurinji.com news

JustAds.co.in - Free Classifieds , Post Free Ads, Best Classified - Most recent ads