Wednesday, January 30, 2008

ஆணுறை வாங்க வெட்கப்படலாமா?


நேற்றைய தினத்தந்தியில் ஒரு செய்தி பார்த்தேன். சிலி கடற்கரையில் ஈருடையில் (டூ பீஸ்) சூரிய குளியலில் இருந்த பெண்களிடம் ஒரு சேவை அமைப்பைச்சேர்ந்தவர்கள் ஆணுறை போன்ற உடையணிந்து ஆணுறையின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்து இலவசமாக ஆணுறைகளை விநுயோகித்தார்களாம். இது போல் நம் ஊர் மெரினா கடற்கரையில் காதலனுடன் காற்று வாங்கும் பெண்களிடம் சென்று ஆணுறையின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்க முடியுமா?.


என் நண்பர் ஒருவரிடம் இதுகற்றி பேசிய போது "அட போப்பா மருந்துக்டைல போயி காண்டம்னு கேட்கவே வெட்கமா இருக்கு"


"இதுல என்ன வெட்கம்?"


"நான் காண்டம் வாங்க சில விதி முறைகள் வச்சிருக்கேன் தெரியுமா?"


"இதுக்குக் கூட விதிமுறைகளா?"


"ஆமா நான் காண்டம் வாங்கப்போகும் கடைல கடைக்காரன் மட்டும் உட்கார்ந்து தேமேனு தெருவை வேடிக்கை பார்த்திட்டிருக்கனும்"


"புரியலயே?"


"அட என்னப்பா நீ இது கூட புரியலன்ற? கடைல வேற யாரும் மருந்து மாத்திரை வாங்கிக்கிட்டு இருக்கக்கூடாது"


"ஓ... அப்புறம்?"


"பெண்கள் வேலை பார்க்காத மருந்துக்கடையா இருக்கனும்"


" ஓ பொண்ணுங்க கிட்டப் போய் காண்டம்னு கேட்க வெட்கம்"


"ஆமா"


"அப்புறம்"


"கடைல நிறையப்பேர் வேலை பார்க்கக் கூடாது"


"ஏன்?"


"நாம போன உடனே எல்லாரும் நம்மளையே பார்ப்பானுக. ஒருத்தன் என்ன சார் வேணும்பான்? ரெண்டு குரோசின் குடுனு சத்தமா கேக்கற மேட்டரா இது. நான் ரகசியமா காண்டம் ஒரு பாக்கெட் குடும்பேன். பக்கத்துல இருக்கறவன் நம்மளை ஒரு மாதிரியா
பார்ப்பான். நமக்குக் கூச்சமா இருக்கும். எதுக்கு இந்த வம்புன்னுதான் தனியாளா இருக்கற கடையா பார்த்து வாங்கறது."


"ம்...... அப்புறம்"


"நாம குடியிருக்கற ஏரியாவுல வாங்கக்கூடாது"


"ஏன்?"


"மறு நாள் காலைல பொண்டாட்டியோட அவன் கடைய தாண்டிப்போகும் போது சங்கடமா இருக்கும்"


"ம்.."


"ஒரே கடைல தொடர்ந்து வாங்கக்கூடாது?"


"ஏன்?"


"ஒரு மாசத்துக்கு எத்தனை வாங்கறோம்னு தெரிஞ்சுருமே. அப்புறம் ரெண்டும் ரெண்டும் நாலுனு கணக்குப் போட்டுருவான்ல"


"ம்......அப்புறம்"


"அப்புறம் என்ன? அவ்வளவுதான்"


" இல்லை இதுல வேற ஏதாவது பிரச்சனை இருக்கானு?"


சிறிது நேரம் யோசித்தவர் தொடர்ந்தார்.


"ஒரு பெரிய பிரச்சனை இருக்கு"


"என்ன அது?"


"நாம கடைக்குப் போனதும் அவசரமா காண்டம் ஒரு பாக்கெட் குடுப்பானு கேட்போம்"


"என்ன அவசரம்"


"நாம வாங்கறத வேற யாரும் பார்த்திரக் கூடாதே?"


"ஓ........."


"அவன் கடைல உள்ள தள்ளி ரகசியமா வெச்சிருப்பான். அதுல ஒரு பாக்கெட் எடுத்து அங்கயே ஒரு கவர்ல போட்டு கொண்டு வந்து குடுப்பான். அவசரமா வாங்கி பாக்கெட்ல போட்டுக்கிட்டு எவ்வளவுனு கேட்டு குடுத்துட்டு உடனே இடத்தை காலிபண்ணிருவோம்"


"இதுல என்ன பிரச்சனை இருக்கு?"


"அவன் என்ன பிராண்டு தர்ரான்? அதோட விலை என்ன? காலாவதி ஆனதா ஆகாததானு எதுவும் பார்க்க முடியாது. ரிப்டு, டாட்டடு, எக்ஸ்ட்ரா டைம்னு என்னனென்னமோ வருது. அதெல்லாம் வாங்கி யூஸ் பண்ணிப்பார்க்கணும்னு ஆசைதான். எங்க கேட்க முடியுது"


காண்டம் வாங்க ஆண்களே இவ்வளவு வெட்கப்படர நாட்டுல பெண்களிடம் இது பற்றி பிரச்சாரம் செய்ய முடியுமா?


அது போகட்டும். எனக்கொரு யோசனை.


எது எதுக்கோ Exclusive show room திறக்கராங்களே, ஏன் இதுக்காக ஒரு Exclusive show room திறக்கக் கூடாது?. நம்ம வெட்கப்படற மக்களும் 'சே..... இதுக்குனு தனியா ஒரு கடையே திறந்திருக்கான் இன்னும் நாம ஏன் வெட்கப்படனும்னு' தைரியமாக உள்ளே சென்று தங்களுக்கு விருப்பமானதைக் கேட்டு வாங்கிக் கொள்வார்களே. மக்களே இது பற்றி உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

9 comments:

chandru said...

காண்டம் வாங்க கூச்சப்படுவதை நிறுத்துவதே சிறந்த வழி . இதில் வெட்கப்பட எதுவுமே இல்லை .

சில எளிய வழிமுறைகள் :
- பொதுவாக கேட்காமல், சிறப்புப்பெயரில் கேட்கலாம் ( எ.கா : KS dott, KS Ribb, MOODS Dott )

- வலைமனையில் தேடலாம் , வாங்கலாம்

- சூப்பர் மார்கெட்டில் வாங்கலாம் ( Food World, FABMALL )

- தானியங்கி இயந்திரம் ( மதுரை )

PPattian : புபட்டியன் said...

நல்ல தேவையான பதிவு. அந்த தனி காட்சியறை ஒரு நல்ல யோசனை.

அப்புறம் வெட்கத்தை விடுவதுதான் நல்லது. காண்டம்னு பொதுவாக கேட்காமல், சந்ரு சொல்றது போல பிராண்டு பேரை சொல்லி கேட்கலாம்.

சேவியர் said...

பேசாம ஆன்லைன் ல வாங்க சொல்லுங்க... :)

நக்கீரன் said...

chandru,புபட்டியன்,
தங்கள் வருகைக்கு நன்றி.

உண்மைதான் வெட்கப்பட்டால் எந்தக்காரியமும் நடக்காது.
தங்கள் யோசனைகளுக்கு நன்றி.

Anonymous said...

சேவியர்,

//பேசாம ஆன்லைன் ல வாங்க சொல்லுங்க... :)//
ஆன்லைன்ல கூட வாங்கலாமா எப்படி?

Anonymous said...

;)

Anonymous said...

//சேவியர்,

//பேசாம ஆன்லைன் ல வாங்க சொல்லுங்க... :)//
ஆன்லைன்ல கூட வாங்கலாமா எப்படி?//

itho ippadiththaan.

http://www.moodsplanet.com/webstore.asp

http://www.ksontheweb.com/9/condoms.ift

http://www.kohinoorpassion.com/store/products/Kohinoor/

http://www.indiaplaza.in/condoms/

Hope they will send the stuff in plain package as done by US websites.

Why not someone start a retail website to sell condoms online like these?

http://www.keepcondom.com/
www.condomdepot.com/

//- சூப்பர் மார்கெட்டில் வாங்கலாம் ( Food World, FABMALL )//
This is more embarassing than buying in drug stores.

Anonymous said...

பெண்கள் கூட வெட்க்கப்படாமல் கடைக்குச்சென்று நாப்கின் கேட்டு வாங்குகிறார்கள். ஒரு ஆண் காண்டம் வாங்க வெட்கப்படலாமா?

kohinoor said...

ஆன்லைன்ல கூட வாங்கலாமா எப்படி?
http://www.kohinoorpassion.com/store/products/Kohinoor

Tamilkurinji.com news

JustAds.co.in - Free Classifieds , Post Free Ads, Best Classified - Most recent ads