Wednesday, January 30, 2008

தமிழர் மானத்தை கப்பலேற்றும் தமிழச்சிகள்.


இன்று காலை தினத்தந்தியில் இந்தசெய்தியைப் படித்து அதிர்ந்தேன்.


"அவன்கிட்ட அப்படி என்னடி காணாதத கண்டுபுட்டீங்க"

10 comments:

TBCD said...

படிப்பவர்களுக்காக...ஒருங்குகுறியில் மாற்றி தந்திருக்கிறேன்..

******************************

நான் 2-வது மனைவி' - `நான் 3-வது மனைவி' - `நான் 4-வது மனைவி'
4 பெண்கள் சொந்தம் கொண்டாடும் `காதல் மன்னன்' கைது
கோர்ட்டு வாசலில் பரபரப்பு


சென்னை, ஜன.31-

4 பெண்களை மணந்த சென்னை தொழில் அதிபர் கோர்ட்டு வாசலில் கைது செய்யப்பட்டார்.

தொழில் அதிபர்

சென்னை மைலாப்பூர் தியாகராயபுரத்தைச் சேர்ந்தவர் ஜோதி பிரகாஷ். தொழில் அதிபர். இவர், சென்னை தங்கசாலையில் ஏற்றுமதி, இறக்குமதி கிளீயரிங் ஏஜென்சி நடத்தி வருகிறார்.

இவரது மனைவி மங்கையர்க்கரசி மைலாப்பூர் போலீஸ் நிலையத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது கணவர், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இன்னொரு புகார்

இதற்கிடையே, சென்னை சூளைமேட்டை சேர்ந்த சரவணன் என்பவர், தொழில் அதிபர் ஜோதி பிரகாஷ் மீது போலீசில் ஒரு புகார் கொடுத்தார். தனது புகார் மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

என்னுடைய மனைவி தீபா என்கிற தீபலட்சுமி (வயது 22). எங்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. எங்களுக்கு 21/2 வயதில் நந்திகா என்ற பெண் குழந்தை உள்ளது. எனது மனைவி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த அக்டோபர் மாதம் 12-ந் தேதி தனது பாட்டி ஊருக்கு செல்வதாக கூறினார்.

எனவே, வேலூர் மாவட்டத்தில் உள்ள கலவைக்கு நான் பஸ்சில் ஏற்றிவிட்டேன். நான்கைந்து மணி நேரம் கழித்து அவர் ஊர் போய் சேர்ந்துவிட்டாரா? என்பதை அறிய போனில் தொடர்பு கொண்டேன். ஆனால், தொடர்புகொள்ள முடியவில்லை. பின்னர், விசாரித்ததில் எனது மனைவி வேலைபார்க்கும் நிறுவனத்தின் உரிமையாளர் ஜோதிபிரகாஷ், எனது மனைவியை கடத்தி சென்றுவிட்டதாக அறிந்தேன்.

பல திருமணம் செய்தவர்

பிரகாசின் மனைவி பெயர் மங்கை. இவர்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளன. மங்கை இருக்கும்போதே, பிரகாஷ், புவனா என்கிற பெண்ணையும், விஜி என்கிற பெண்ணையும் மனைவியாக வைத்துக்கொண்டுள்ளார். இப்போது எனது மனைவியையும் கடத்தி வைத்துள்ளார்.

எனது மனைவி இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். ஆகவே, எனது மனைவியை மீட்டுத் தரவேண்டும்.

இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில் அதிபர் ஜோதி பிரகாஷை தேடி வந்தார்கள். போலீசார் தேடுவதை அறிந்த ஜோதி பிரகாஷ், சென்னையில் இருந்து தப்பி ஓடிவிட்டார். அவர், ஐதராபாத், பெங்களூர் போன்ற பகுதிகளில் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆனாலும் அவர் போலீசார் கையில் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்தார்.

கோர்ட்டில் மனு

மனைவி கிடைத்து விடுவார் என்று பொறுத்து பொறுத்து பார்த்த சரவணன், `தனது மனைவி தீபாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும்' என்று கோரி ஐகோர்ட்டில், ஆட்கொணர்வு மனுவை (ஹேபியஸ் கார்ப்பஸ்) தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் பி.டி.தினகரன், ஆர்.ரகுபதி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது தொழில் அதிபர் பிரகாசையும், தீபாவையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

தீபாவின் கணவர் சரவணன் தனது பெற்றோருடன் கோர்ட்டுக்கு வந்திருந்தார்.

பிரகாசுடன்தான் வாழ்வேன்

தீபா, நீதிபதிகள் முன்பு ஆஜராகி கூறும்போது, ஜோதி பிரகாஷ், "என்னை சட்டவிரோதமாக அடைத்து வைக்கவில்லை. விருப்பப்படி தான் அவருடன் வாழ்ந்து வருகிறேன். ஜார்ஜ் டவுன் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மாதம் 13-ந் தேதி நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். தற்போது 3 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். இனிமேல், ஒருபோதும் கணவருடன் செல்லமாட்டேன். பிரகாசுடன் தான் வாழ்வேன்'' என்று திட்டவட்டமாக கூறினார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், `பிரகாசுக்கு ஏற்கனவே முதல் மனைவி இருக்கிறாரே' என்று தெரிவித்தனர். ஜோதி பிரகாஷ் கூறும்போது, "முதல் மனைவிக்கு முதுகு தண்டு வலி இருப்பதால் அவர் சமëமதத்தோடு தான் தீபாவை 2-வது திருமணம் செய்தேன்'' என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

பிரகாஷிடம் நீதிபதிகள், "தீபாவின் கணவர் சரவணன் கோர்ட்டு உதவியை நாடி வந்துள்ளாரே'' என்று கேட்டனர். அதற்கு பிரகாஷ், `தீபா, விரும்பினால் அழைத்து செல்லட்டும்' என்றார். ஆனால் தீபா, ``நான் சரவணனுடன் போகமாட்டேன் என்றும், பிரகாசுடன் தான் செல்வேன்'' என்றும் பிடிவாதமாக கூறினார். விருப்பப்படிதான் பிரகாசுடன் இருக்கிறேன் என்று தீபா தெரிவித்ததால், இந்த வழக்கை இத்தோடு முடித்து விடுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

தீபாவின் பிடிவாதத்தை கண்டு கோபம் அடைந்த சரவணனின் அம்மா இப்படிப்பட்ட பெண் எங்களுக்கு தேவை இல்லை என்று கூறிவிட்டு கோர்ட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.

நான்தான் 2-வது மனைவி

தீபாவை பற்றி விசாரணை நடந்து கொண்டு இருக்கும்போது திடீர் திருப்பமாக ஒரு சம்பவம் நடந்தது.

ஐகோர்ட்டுக்கு வந்திருந்த புவனா என்ற பெண் நான்தான் ஜோதிபிரகாஷின் 2-வது மனைவி என்று ஒரு குண்டை தூக்கிப்போட்டார். தனக்கும், பிரகாசுக்கும் 24.1.2004 அன்று மேல்மருவத்தூரில் திருமணம் நடந்தது என்று கூறி கோர்ட்டில் சில ஆவணங்களை தாக்கல் செய்தார். இதனால் கோர்ட்டில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

நான் 4-வது மனைவி

இதன்பிறகு, கோர்ட்டில் இருந்து ஜோதி பிரகாஷ் வெளியே வந்தபோது அங்கு வந்த இன்னொரு பெண், தானும் ஜோதி பிரகாஷின் மனைவிதான் என்று 4-வது நபராக அவர் மீது உரிமை கொண்டாடினார். 4 பெண்களும் ஒரு ஆண் மீது உரிமை கொண்டாடுவதை கேள்விப்பட்டு கோர்ட்டு வளாகத்தில் இருந்தவர்கள் திகைப்பில் மூழ்கினார்கள்.

அப்போது, கோர்ட்டு முன்பு மைலாப்பூர் உதவி கமிஷனர் ஐசக் பால்ராஜ் உத்தரவின் பேரில் காத்திருந்த போலீசார், ஜோதி பிரகாஷின் முதல் மனைவி மங்கையர்கரசி கொடுத்த புகாரின் பேரில், ஜோதி பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
*****************

நக்கீரன் said...

நன்றி TBCD சார்.
ஒருங்குறியில் மாற்றுவது எப்படி என்று கற்றுத்தர முடியுமா? பிளீஸ்....

கருப்பன்/Karuppan said...

செய்திக்கும் தமிழனின் மானத்திற்கும் உள்ள சம்பந்தம் விளங்கவில்லை :-(

லக்ஷ்மி said...

கலக்குறீங்களே சார். அப்போ நாலு பேரோடயும் குடித்தனம் பண்ற அந்த ஆள் தமிழன் இல்லயா? இல்ல அவன் செய்யற காரியம் தமிழர் மானத்தை தூக்கி நிறுத்துதா? இதுல அந்தப் பொண்ணுங்க மேல மட்டுந்தான் தப்பா? இல்ல, சும்மா தெரிஞ்சுக்கத்தான் கேக்குறேன்.

சந்திரசேகர் said...

இந்த பொண்ணுங்களே இப்படித்தான் . குத்துங்க எசமான் குத்துங்க !!!

Anonymous said...

செம ஹிட்ஸ் போல. கெளப்புங்க.

Anonymous said...

:)...

Anonymous said...

அப்படிப் போடு

TBCD said...

http://www.suratha.com/reader.htm


இங்கே போயி, நகலைப் போட்டு, சரியான, எழுத்துருவை தேர்வு செய்தால், கீழே உள்ள பெட்டியி்ல் வரும்.

நக்கீரன் said...

tbcd,

//இங்கே போயி, நகலைப் போட்டு, சரியான, எழுத்துருவை தேர்வு செய்தால், கீழே உள்ள பெட்டியி்ல் வரும்//

நன்றி சார்.

Tamilkurinji.com news

JustAds.co.in - Free Classifieds , Post Free Ads, Best Classified - Most recent ads