இஸ்ரோ தலைவர், இந்தியா விரைவில் நிலவுக்கு விண்கலம் அனுப்ப இருப்பதாக அறிவித்த நாளில், நிலவில் சாய்பாபா உருவம் தெரிவதாக சென்னையில் ஒரு வதந்தி பரபரப்பாக உலாவந்தது. நானும் மொட்டை மாடிக்குப்போய் ஆர்வமாக பார்த்தேன். எனக்கு பாட்டி வடைசுட்டதுதான் தெரிந்தது. என் மனைவியை அழைத்துக் காட்டினேன். அவளுக்கு ஷிரிடி சாய்பாபா தெரிவதாகச் சொன்னாள். என் சகோதரி பார்த்து விட்டு புட்டபர்த்தி சாய்பாபா தெரிவதாகச் சொன்னார். என்னடா இது என்று மீண்டும் நான் வேறு கோணத்தில் பார்த்தேன் அப்போது எனக்கு தலைப்பாகை இல்லாத விவேகானந்தர் முகம் போலத்தெரிந்தது. மூன்றாம் வகுப்புப் படிக்கும் என் மகளை அழைத்துக் காட்டினேன் "டாடி எனக்கு பாட்டி வடை சுடறதுதான் தெரியுது. ஆனா காக்காயத்தான் காணோம்" என்றாள்.
ஆக நிலாவின் மேடு பள்ளங்களால் ஏற்படும் நிழல் அவரவர் கற்பனைக்கு ஏற்றார் போல் உருவங்களாய் தோன்றுகிறது. (எப்படி என் கண்டுபிடிப்பு?). நேற்றும் பவுர்ணமி நிலவைப் பார்த்தேன். என் மனைவியை அழைத்து உன் முகம் தெரிகிறது பார் என்றேன்.அடிக்க வந்தாள். நண்பர்களே நீங்களும் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் உங்களுக்கு என்ன உருவம் தெரிகிறதென்று.
Sunday, November 25, 2007
நிலவில் தெரிந்த சாய்பாபா?
பதிவர்:-
நக்கீரன்
நேரம்
4:12 AM
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
எனக்கு பெரியார் தன் தாடியை பிடித்து இழுத்துக் கொண்டு அழுவதாக தோன்றியது. உடனே செயற்கோள் உதவியுடன் அவரை தொடர்பு கொண்டு கேட்டதில் நான் பட்டபாடு வீணாகிடுமோ என்று உடல் எல்லாம் தீயாய் எறிகிறது என்று சொன்னார். நான் அவரை அமைதி காக்குமாறு வேண்டினேன்இ பிறகு தான் அவர் டென்ஷன் குறைந்தது.
// நேற்றும் பவுர்ணமி நிலவைப் பார்த்தேன். என் மனைவியை அழைத்து உன் முகம் தெரிகிறது பார் என்றேன்.அடிக்க வந்தாள்.//
அடிக்கடி எதையாவது சொல்லி இப்பிடி அடிவாங்கரதையெல்லாம் ..வெளிப்படையா,வெள்ளேந்தி தனமா சொல்லறிங்களே?. இம்புட்டு நல்லவரா நீங்க?..ஹிஹி..
எனக்கு என்னவோ தங்க நெல்லிக்காய் (?) போலதேன் தோனுது..:p
Post a Comment