Friday, April 10, 2009

உறவுகள் ஊனமானால்.

என் பெயர் நரேன் .இது என் கதை .இது நிஐமா இப்படியும் நடக்குமா என்று கேள்வி கேட்காதீர்கள். மூச்சுக்குழலுக்குள் முள் சிக்கி கொண்டநிலையில் உள்ளேன் .கக்கவும் முடியாத முழுங்கவும் முடியாத தவிப்பு . அது உங்களுக்கு புரியாது அந்த அவஸ்தையை அனுபவித்தால் தான் புரியும் .இது எச்சரிக்கை நீங்களும் என்னை போல் தவிக்க வேண்டாம் . அத்ற்காகத்தான் இந்த கதையை எழுதுகிறேன் .இதை படித்து விட்டு '' த்து ''' என்று துப்பி விடாதீர்கள். என் சுமையை இறக்கி வைக்க ஒரு கை கொடுங்கள் இல்லையேல் ஒதுங்கிப் போய் விடுங்கள்

இது என்செயலை நியாயப்படுத்தவதற்காக அல்ல. சமுதாய கட்டு கோப்புகளிலும் உறவு சங்கிலியின் உன்னதத்திலும் நம்பிக்கை வைத்துள்ள உங்களது மனதை பலப்படுத்தி கொள்ளவே இந்த பீடிகை .

எனக்கு இப்பொழுது உறுத்துகிறது. என் பதினைந்து வருட தாம்பத்தியத்திற்கு பிறகு என் அகல்யாவை மனைவியாக ஏற்று கொண்டது தவறோ என்று தோன்றுகிறது . ஏனென்றால் அகல்யா வேறு யாறுமல்ல என் ஒன்றுவிட்ட சித்தப்பாவின் மகள் .எனக்கு சகோதரி இப்பொழுது என் மனைவி ''அபச்சாரம் அபச்சாரம்'' என்று அடித்து கொள்ளாதீர்கள் விதி யாரை விட்டது .

சித்தப்பா வட இந்தியாவில் பெரிய உத்தியோகத்தில் வேலை பார்த்து விட்டு ஓய்வு பெற்ற பிறகு சொந்த ஊருக்கு திரும்பியிருந்தார் .

அகல்யாவை அப்பொழுதுதான் முதல்முறையாக பார்த்தேன். முதல் பார்வையிலேயே அவள் என்னோடு ஒட்டி கொண்டாள் அதிக நாள் தொடர்பு விட்டு போனதால் அவளை என்னால் சகோதரியாக ஏற்றுகொள்ள முடியவில்லை .அவளை ஒரு நல்ல தோழியாக நினைத்து பழகினேன்.

பம்பாயிலும் டெல்லியிலும் வளர்ந்ததாலோ என்னவோ அச்சம் மடம் நாணம் போன்ற வேண்டாத சமாச்சாரங்கள் அவளிடம்இல்லை .ஆண்பிள்ளையை பார்த்ததும் முந்தானையை சரிசெய்யும் அனிச்சைச்செயல் அவளிடம் இல்லை .

ஜீன்சும் ;டி்' சர்ட்டும் அணியும் சுதந்திரத்தில் வளர்ந்தவள். அவள் சேலைகட்டுவது அபூர்வம். அதனால் அவளிடம் முந்தானையை சரிசெய்யும் பழக்கம் இல்லை .

இந்த சுதந்திரம் தான் என்னை அவள்பால் ஈர்த்தது . சில விசயங்களை சகோதரியிடம் பேசமுடியாது .ஆனால் நான் அகல்யாவிடம் பேசினேன் .காதல், காமத்தில் இருந்து கருக்கலைப்புவரை ,எலியட்ஸிலிருந்து ராபின்ஹுட் வரை அவளிடம் பேசமுடிந்தது.

நாங்கள் அண்ணன் தங்கை என்பதால் எங்கள் நெருக்கம் யாரையும் உறுத்தவில்லை. அண்ணன், தங்கை உறவிற்கு அப்பாற்பட்டு சிறு நூலிழை போல் ஏதோ ஒன்று எங்களை இணைத்தது .அது எங்களது ஒன்றுபட்ட சிந்தனையால் வலுப்பெற்றது.படித்தவற்றை ஆராய தூண்டியது .சிறு சிறு தொடல்கள் மூலம் சிலிர்த்து கொள்ளமுடிந்தது. கண்ணுக்கு தெரியாத அந்த சிறு நூலிழை மேலும் வலூப்பெற்றது.

ஒருநாள் கிடைத்த தனிமை எங்களின் அனாடமி வேறூபாட்டை ஆராய தூண்டியது. எங்களுக்கிடையே இருந்த ஆதாரமான உறவு மறந்து போனது .விளைவு புது உறவு ஜனித்தது .அவள் கர்ப்பமானாள். பிறகுதான் ஊர்உலகம் நினைவுக்கு வந்து பயமுறுத்தியது . கருவை கலைத்து கொண்டாள். இதற்கிடையே தீடீரென்று அவளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது .நாங்கள் இனி என்ன செய்வது? என்று யோசிப்பதற்குள்
திருமணமே முடிந்துவிட்டது .

அவள் கணவனோடு வாழவில்லை. அவனால் இவளது 'கிஸ்மி' T; சர்ட்டை ஜீரணித்து கொள்ள முடியவில்லை. அவளுக்கோ என்னை என் நினைவுகளை மறக்க முடியவில்லை. பிறந்தகத்திற்கு ஓடி வந்தாள் சித்தியும் சித்தப்பாவும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்கள்.

ஒரே மாதத்தில் திரும்பவும் ஓடி வந்தாள் .பிறந்தகத்திற்கும் புகுந்தகத்திற்கும் இடையிலான அவளது ஓட்டம் தொடர்ந்தது .

நான் இதை ஒரு முடிவிற்கு கொண்டு வர நினைத்தேன் .அவளை பார்க்க அவள் புகுந்தவீட்டிற்கு சென்றேன். அவளது கணவன் ,'உங்க தங்கச்சிக்கு நல்ல புத்தி சொல்லிட்டு போங்க .அவ என்னமோ தான் இன்னும் டெல்லியில் வாழுறதா நினைச்சிட்டு இருக்கா. கல்யாணத்திற்கு முன் பேண்டும் 'சட்டையுமா ஊர்சுத்துனா. சரி, கல்யாணத்திற்கு பின்னாடியாவது அடக்க ஒடுக்கமா இருக்க வேண்டாமா? படிச்சவ புரிஞ்சு நடந்துப்பானு நினைச்சேன். 'இடத்திற்கு தகுந்தமாறி மாற வேண்டாமா .இது புரியாத ஜென்மமா இருக்கு .ஒழுக்கமா இருந்தா இங்க இருக்கட்டும். இல்லைனா நீங்களே கூட்டிட்டு போயிடுங்க' என்று கோபமாக கத்தி விட்டு வேலைக்கு சென்றுவிட்டான்.
.

சனிப்பய நாக்குல ஏன்தான் இந்த வார்த்தை வந்துதோனு இப்ப நினைச்சி வருத்தபடுறேன் .இப்ப வருத்தபட்டு என்ன பிரயோஜனம்..


'இனி நான் உனக்கு முக்கியமில்லை .உன் கணவன்தான் உனக்கு முக்கியம் .அவனொடு விட்டு கொடுத்து வாழ முயற்சி செய்.கல்யாணம் ஆன உடனே காதலிச்சவனை 'வாங்க அண்ணா' என்று வாய்கூசாம கூப்பிடுற காலம் இது. இனி நான் உனக்கு உண்மையிலேயே அண்ணனா இருந்திட்டு போயிடுறேன் .என்னை ''மறந்து விடு'' என்று என்ன என்னவோ சொல்ல நினைத்தேன்..

ஆனால் அவள் என்னை ஆரதழுவிக்கொண்டு அழுத போது சொல்ல நினைத்தது எல்லாம் மறந்து போனது. அவளை இறுக அணைத்து முத்தமிட்டேன் .முடிந்து போனதாக நான் நினைத்த எங்கள் உறவுமீண்டும் உயிர்த்து கொண்டது .இருவரும் வடக்கு நோக்கி ஓடிவந்தோம்.
.
.இங்கு யாருக்கு தெரியும் நானும் அவளும் அண்ணன் தங்கை என்று .நாங்கள் கணவன் மனைவியாக எங்கள் இல்லறத்தை நல்லறமாக அமைத்து கொண்டோம்

எங்கள் ஆத்மார்த்தமான தாம்பத்தியத்திற்கு அர்த்தம் கொடுப்பது போல் அழகு மலராய் அமுதா பிறந்தாள் .இருவரும் பூரித்து போனோம். சமுதாயம்,, கட்டுப்பாடு உறவுசங்கிலி எல்லாவற்றையும் உடைத்தெரிந்துவிட்ட பெருமையில் வெற்றி மமதையில் குழந்தையைசுற்றி உலா வந்தோம் .
.
அமுதாவிற்கு ஐந்து வயதான பிறகுதான் எங்கள் கணக்கு தவறு என புரிந்து கொண்டோம் .நாங்கள் தகர்த்துவிட்டதாக நினைத்த சமூகக் கட்டுப்பாடும் உறவுசங்கிலியும் எங்கள் மீதே விழுந்து அழுத்தியிருப்பதையும் அது ஏற்படுத்ததியிருந்த் ரணம் புரையோடி போயிருப்பதையும் உணர்ந்தோம்.
ஆம்,அமுதாவுக்கு அபரிமதமான அழகை கொடுத்த ஆண்டவன் அறிவை மட்டும் ஏனோ கொடுக்க மறந்துவிட்டான். அவளது உருவம் வளர்ந்ததே தவிர அறிவு மட்டும் வளரவேயில்லை.

நாங்கள் தளர்ந்தோம்.அகல்யா அழுதாள் மூலையில் முடங்க தொடங்கினாள் . அவளது ஆர்ப்பாட்டம் எல்லாம் அடங்கி போனது .

இதோ பதினைந்து வயது அமுதா தன்சட்டை பட்டன் அறுந்து வெளியே தெரியும் மார்பை பற்றி கவலைபடாமல் தோட்டத்தில் வண்ணத்து பூச்சியை துரத்தி கொண்டிருக்கிறாள் .

ஒருநாள் ஈ பிடிக்கபோய் டிவியை உடைத்துவிட்டு அழுதாள் ''ஏம்மா அழறே உடைந்தா போகுது விடு'' என்ற போது ''ஈ. ஓடிடுச்சுப்பா பிடிச்சு கொடு'' என்று பரிதாபமாய் கண்ணை கசக்கினாள் . சிறு குழந்தை போல் தரையில் உருண்டு கையை காலை உதைத்து ஆர்ப்பாட்டம் செய்தாள் .

மற்றொரு நாள் அகல்யா அவளை குளிப்பாட்டி உடை மாற்றும்போது ''சட்டை போடமாட்டேன் போ'' என்று அடம் பிடித்தாள் .அகல்யா கோபத்தில் அவளை அடித்துவிட்டாள். பதினைந்து வயது குழந்தை வெற்று மார்போடு ஓடிவந்து என்னை கட்டி கொண்டு பாருப்பா அம்மா அடிக்கிறாள் என்று அழுதாள்.நான் செய்வதறியாது நின்றேன் .அகல்யா என்னை எரித்து விடுவது போல் பார்த்தாள் .என் மகளையே நான் வெறித்து பார்ப்பதாக நினைத்தாள் போலும்.

சகோதரியான தன்னையே திருமணம் செய்து கொண்டவன், அழகு சிலையான தன் மகளை தனிமையில் இது போல் பார்க்க நேர்ந்தால் தன்நிலை வழுவி ஏதாவது செய்து விடுவானோ என்று பயப்படுகிறாள் .அவள் பயமும் நியாயம்தானே.

தன்வினை தன்னை சுடும். இதோ என்வினை என்னை அனலாய்,பழுக்ககாய்ச்சிய இரும்பாய் என் இதயத்தை மட்டுமல்ல அகல்யாவின் இதயத்தையும் சேர்த்தே சுடுகிறது .

என் குழந்தையின் எதிர்காலம்? எனக்கு இருளாய் தெரிகிறது. ஆனால் அவள் உலகிலோ இருள் வெளிச்சம் என்ற பேதமில்லை.நல்லவர் கெட்டவன் வித்தியாசமில்லை.நாளை பற்றியகவலையும்இல்லை.எல்லா கவலைகளையும் ,சுமைகளையும் என்மீது ஏற்றிவைத்துவிட்டு எதிர்காலம் பற்றி பயமில்லாமல் பொம்மைகளோடு விளையாடி கொண்டிருக்கிறாள்.

எங்களுக்கு பிறகு இவள் கதி என்ன? அனாதையாய் திரிவாளோ ? நான் செய்த பாவத்திற்கு என் குழந்தை படப் போகிறாளா?

ஆண்டவனே அழகை கொடுத்த நீ குருடாய் ஊமையாய் அல்லது கை கால் ஊனமாய் படைத்திருக்கலாமே எப்படியாவது சகித்துகொண்டு வாழ கத்து கொண்டிருப்பாளே . . .

ஒரு வேளை அப்படி அறிவோடு பிறந்திருந்தால் ''பாவிகளா நீங்கள் செய்த பாவத்தால் நான் இன்று ஊனமாக வளைந்து நிற்கிறேனே . உங்கள் இச்சையை தீர்த்து கொள்ள என்னை ஏன் அரை குறையாய் உருவாக்கினீர்கள் . உனக்கு மனைவியாய் தேர்ந்தெடுக்க உன் தங்கையை தவிர இந்த உலகில் வேறு பெண்ணே கிடைக்கவில்லையா'' ?என்று வார்த்தையால் சித்திரவதை செய்திருப்பாளோ? அதனால்தான் அவளை அறிவில்லாமல் படைத்தாயோ.

ஆண்டவனே என்நிலை இனியாருக்கும் வர வேண்டாம் .சகோதரியை சகோதரியாய் பாவிக்கும் மனநிலையை அனைவருக்கும் கொடு.

உறவு புனிதமானது அதை உடைக்க நினைத்தால் என்நிலைதான் உங்களுக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.முடிந்தால் என் குழந்தைக்கு அறிவை கொடுக்க ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

இச்சிறுகதை தமிழ்குறிஞ்சி இணைய இதழில் வெளியாகியுள்ளது.

No comments:

Tamilkurinji.com news

JustAds.co.in - Free Classifieds , Post Free Ads, Best Classified - Most recent ads