அது ஒரு மழைநாள் இரவு.
ஆளரவமற்ற தெரு
மெலிதான தூரலில்
நனைந்த கோழியாய்
நான் நடக்கின்றேன்.
மழை வலுத்தது குளிர் வாட்டியது
உன் இல்லம் என்பதறியாமல்
ஒதுங்கினேன்.
ஜன்னல் வழியே கசிகின்றது
மல்லிகை வாசம்.
திரும்பிப் பார்த்தேன்
ஒளிரும் நிலவாய்
உன் முகம்.
"யாரது?"
அதிகார வார்தையை
அன்பாய் பிரயோகித்தாய்.
"கனமான மழை
அதனால் ஒதுங்கினேன்"
"ஏன் நனைகிறீர்கள்
உள்ளே வாருங்கள்"
கதவு திறந்தாய்
ஒற்றை மெழுகுவர்த்தியின்
ஒளியில் உன் வடிவம் கண்டேண்.
என் தொண்டைக்குழியில்
எதுவோ அடைத்தது.
"வீட்டில்.....?"
"யாருமில்லை"
தயங்கினேன்
"பரவாயில்லை வாருங்கள்"
உள்ளே வந்தேன்.
"அமருங்கள்"
எதையோ எடுக்க உள்ளே சென்றாய்
காற்றின் வேகத்தில்
கதவு தானாய் மூடிக்கொண்டது.
எனக்குள்
எதுவோ திறந்து கொண்டது.
எரிந்த மெழுகு வர்த்தியும்
அணைந்த சில நொடிகளில்
என்காதருகே உன் மூச்சுக்காற்றின்
வெப்பம் உணர்ந்தேன்.
நம் இருவருக்குள்ளும்
பற்றிக்கொண்டது நெருப்பு.
நான் என் நினைவிழந்தேன்.
விடியலில் நான் விழித்தபோது
என் வீட்டிலிருந்தேன்.
நேற்றிரவு நடந்தது
நிஜமா? கனவா?
குழம்பிப்போனேன்.
உன் வீட்டைத்தேடி ஓடி வந்தேன்
பூட்டுத் தொங்கியது.
அருகிலிருந்தவரிடம் கேட்டேன்.
"இங்கே இருந்தவர்கள்?"
"தம்பி ஊருக்குப்புதுசா?"
"ஆம்"
"இங்கே இருந்த இளம்பெண்
ஏனோ தெரியவில்லை
மூன்று மாதம் முன்பு
துக்கில் தொங்கி விட்டாள்
பாவம்" என்றார்.
Saturday, December 01, 2007
வீட்டில்....? யாருமில்லை.
பதிவர்:- நக்கீரன் நேரம் 10:12 AM
வகை நிமிடக் கதை.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ரொம்ப்பப் பயமாக் கீது. தல
தமிழ் நெஞ்சம் பயப்படலாமா.
இது ஆ...........ரம்பம் தான்.
யூகிக்க முடிந்த கதை.....எனினும் பயமுறுத்தியது, அழகான எழுத்து நடை!
ரொம்ப சுருக்கமாக....தெளிவா பயமுறுத்தியிருக்கிறீங்க!!
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திவ்யா.
Post a Comment