சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தலைமை தேர்தல் அதிகாரி அமுதா, "நம் நாட்டில் 18 வயது முதல் 34 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தான் பெருமளவு வாக்களிக்காமல் உள்ளனர். 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் 90 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள். எல்லோரும் வாக்களிக்க வேண்டும். இல்லை என்றால் ஜனநாயகம் இருக்காது.
வெளிநாட்டில் புரட்சி நடப்பதை எல்லாம் பார்க்கிறோம். இளைஞர்களிடம் மனமாற்றம் வர வேண்டும்." என்று கூறினார்.
இது '49-ஓ போடுவது எப்படி?- அதிகாரி விளக்கம்' என்ற தலைப்பில் இன்று ஆனந்த விகடனில் வெளியாகியுள்ள செய்தி.
"மன மாற்றம் வர வேண்டும்" என்று பேசிய மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக புகார் கூறும் திமுக, தலைமை தேர்தல் அதிகாரி அமுதா மீதும் புகார் கூறுமா? அமுதாவையும் மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதுமா?
-----------------------------------------
நேற்று தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வட்டாட்சியர் காளிமுத்து அழகிரியின் ஆட்கள் தன்னை தலையில் தாக்கியதாகக் கூறினார்.
நேற்று இரவு என்ன நடந்ததோ தெரியவில்லை இன்று மாவட்ட ஆட்சியர் சகாயம் அவர்களின் தூண்டுதலால் பொய்புகார் கொடுத்ததாக விளக்க மளித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்துக்கு அவர் எழுதிய விளக்கக் கடிதம் கலைஞர் தொலைக்காட்சியில் காட்டப்படுகிறது.
தேர்தல் ஆணையத்துக்கு அவர் எழுதிய விளக்கக் கடிதம் கலைஞர் தொலைக்காட்சிக்கு எப்படிக்கிடைத்தது?
Monday, April 04, 2011
என்ன நடக்கிறது மதுரையில்?
பதிவர்:-
நக்கீரன்
நேரம்
7:12 AM
0
வாசகர் கடிதம்
Thursday, February 03, 2011
குழந்தையின்மை - Infertility
குழந்தையின்மை அல்லது மலட்டுத்தன்மை என்பது மானுட சமுதாயத்தில் பரவலாகக் காணப்படுகின்ற ஒரு துயரப்படுத்தும் குறையாகும். இது தம்பதியர்களை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. வாழ்க்கையில் வெறுமை, ஏமாற்றம் பெண்களைப் பொறுத்தமட்டில் நாம் தாய்மை அடைய முடியவில்லையே என்ற ஏக்கமும் மலடி என்று சமுதாயம் கொடுக்கும் பட்டமும் அவர்கள் மனதைப் பாதிக்கின்றன. இதனால் சிலர் தற்கொலை முயற்சியில் கூட ஈடுபடுகின்றனர்.
ஆண்களைப் பொறுத்தவரை நம்மால் ஒரு குழந்தைக்குத் தகப்பன் ஆக முடியவில்லையே என்ற ஆதங்கம் மற்றும் சமுதாயம் கூறும் வன்மையான சொற்கள் எல்லாம் சேர்ந்து குடும்ப வாழ்க்கையைக் கூட சீர்குலையச் செய்து கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படுத்தி விவாகரத்தில் கூட முடியும்படியாய் செய்து விடுகிறது.
இந்த குழந்தையின்மைக்கான காரணங்ளை நாம் ஆராய்ந்து பார்க்கும் போது ஆண்களைப் பொறுத்தவரை சில பிறவிக் குறைபாடுகள் தவிர சுற்றுச் சூழலில் ஏற்படும் மாசுவினாலும், கெமிக்கல் தொழிற்சாலைகள், ஆஸபெஸ்ட்டாஸ் தொழிற்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் ஆழ்கடல் மூழ்குதல் போன்ற தொழில்களில் ஈடுபடுபம் ஆண்களுக்கு விந்துவில் உயிரணுக்களின் எண்ணிக்கை குறைந்து மலட்டுத்தன்மை ஏற்பட ஏதுவாகிறது. மேலும் சிறுவயதில் ஏற்பட்ட புட்டாலம்மை, சின்னம்மை போன்றவைகளின் தாக்கமும் மற்றும் சிலருக்கு ஏற்பட்ட பால்வினை நோய்களின் தாக்கமும் உயிரணுக்களின் வீரியத்தை குறைத்தும் அணுக்கள் வெளியேறாது தடைகள் ஏற்படுத்தியும் மலட்டுத்தன்மையை உண்டுபண்ணுகிறது.
பெண்களைப் பொறுத்தவரை குழந்தையின்மைக்கான காணங்கள் ஆண்களைவிட சற்று அதிகமாகவே காணப்படுகிறது. உளவியல் ரீதியாக பார்க்கும் போது இளவயது திருமணம், மனபக்குவம் அடையாமல் தாம்பத்ய உறவை நினைத்து பயம், அருவருப்பு, மன உளைச்சல், மன இறுக்கம், மன வேதனை, இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கங்கள், வேகமும் மன அழுத்தமும் உள்ள எந்திர வாழ்க்கை போன்றவை காரணங்களாகின்றன.
உறுப்புகளின் குறைபாடுகள் :
உறுப்புகளின் குறைபாடுகள் ரீதியாகப் பார்க்கும் போது
* கன்னித்திரை பிழவுபட முடியாது கடினமாய் இருத்தல் (Hymen unholed)
* கர்ப்பப்பை, சினைப்பை, கருக்குழாய் வளர்ச்சியின்மை
* கர்ப்பப்பை கட்டிகள் (Ovarian Cyst)
* கர்ப்பப்பை இறக்கம்
* கர்ப்பப்பை உள்தோல் பாதிப்பு (endometriosis)
* வெள்ளைபடுதல்
* மாதவிடாய் கோளாறுகள்
* விலிமிக்க மாதவிடாய் (Dysmennorrhoea)
* அதிக ரத்தப்போக்கு
* தொடர்ச்சியாய் கருச்சிதைவு ஏற்படுதல் (Habitual abortion)
* உடல் பருமன் (Obesity)
* சுரப்பி இயக்கக் கோளாறுகளால் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள்
* தைராய்டு போன்றவைகள் காரணமாய் அமைகின்றன.
மேலும் பிறப்பு உறுப்புகளில் தொற்று நோய்கள், பால்வினை நோய்கள் போன்றவைகளால் ஏற்படும் குறைபாடுகள் கூட காரணங்களாய் அமைகின்றன.
மேலும்படிக்க
http://drsdevika.com/
பதிவர்:-
நக்கீரன்
நேரம்
8:32 PM
0
வாசகர் கடிதம்
வகை சித்த மருத்துவம்
Wednesday, January 26, 2011
குழந்தையின்மையா? தீர்வு சொல்கிறார் டாக்டர்.தேவிகா அவர்கள்
இந்தியாவின் தென் கோடியில் அமைந்திருக்கும் தமிழ்நாட்டின் தலை நகர் சென்னையில் சாலிகிராமம் என்ற இடத்தில் சக்தி ஹாஸ்பிட்டல் என்ற சித்த மருத்துவமனையை நடத்தி வருபவர் Dr.S.தேவிகா அவர்கள்.
பாரம்பரிய முறையில் சித்த மருத்துவம் பயின்று தமிழக அரசின் அங்கீகாரம் பெற்று, இருபது வருடங்களுக்கும் மேலாக குழந்தையின்மைக்கான (INFERTILITY) சிறப்பு மருத்துவம் செய்து வருகிறார் மருத்துவர் S. தேவிகா அவர்கள்.
மருத்துவர் S. தேவிகா அவர்களின் தொழில் நேர்திதியும், அர்ப்பணிப்பும், தெய்வபக்தியும் அவரை இத்தொழிலுக்கு கைராசியான மருத்துவர் என்ற பெயரைப் பெற்றுத் தந்துள்ளது. அவரால் பயனடைந்த தம்பதியர் ஏராளம்.
சக்தி மருத்துவமனையில், சித்த மருத்துவத்தின் மூலம் கருக்குழாய் அடைப்பு, (Fallopian tube block), சினைப்பை கட்டிகள் (PCOS) கருப்பை சவ்வு அழற்சி (Endometriosis), ஒழுங்கற்ற மாத விலக்கு (Irregular Menstruation), கருப்பைக் கழலை (Fibroid Uterus), பெரும்பாடு (அதிகமாக கட்டி கட்டியான உதிரப்போக்கு), தைராய்டு சுரப்பி கோளாறு (Thyroid Dysfunction), சினை முட்டை சரிவர வளராமை போன்ற காரணங்களுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
குழந்தையின்மை என்ற குறை இன்று பரவலாகக் காணப்படுகிறது. இது கணவன், மனைவி இருவரும் சம்பந்தப்பட்ட பிரச்சனை. இருவரில் யாருக்கு வேண்டுமானாலும் குறை இருக்கலாம். திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகியும் எந்தவித கட்டுபாட்டுடன் இல்லாமல் இருந்தும் குழந்தைபேறு இல்லை என்றால் கணவன் மனைவி இருவரும் மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
இதில் சில பிறவிக் குறைபாடுகள் தவிர ஆண்களுக்கான இதரப் பிரச்சனைகளுக்கும், பெண்களுக்கான பிரச்சனைகளுக்கும் சித்தமருத்துவத்தில் பக்க விளைவு இல்லாத மருந்துகளும் தீர்வுகளும் உள்ளன.
மேலும் விபரங்களுக்கு : டாக்டர்.தேவிகா
பதிவர்:-
நக்கீரன்
நேரம்
7:49 PM
0
வாசகர் கடிதம்