சென்னையின் மிகப்பெரிய பிரச்சனை போக்குவரத்து நெரிசல்.
கட்டப்பட்டு வரும் மேம்பாலங்கள் எப்போது முடிவடைந்து
எப்போது திறப்பு விழாகண்டு இந்தப்பிரச்சனை தீரும் என்று
தெரியவில்லை.
எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல நெடுஞசாலைத்
துறையும், சென்னை மாநகராட்சியும் செய்யும் தொல்லை
தாங்க முடியவில்லை. சாலையோரம் சேரும் மண்ணை
அகற்றுகிறோம் என்று சொல்லி சாலையின் பாதியை
அடைத்துக் கொள்கிறார்கள். சாலையை சுத்தப்படுத்துவது
நல்ல விசயம்தானே இதற்க்குப் போய் ஏன் அலுத்துக்கொள்கிறாய்
என்கிறீர்களா?. ஆனால் அதற்கும் நேரம் காலம் இருக்கிறதல்லவா?
போக்குவரத்துக் குறைவாக இருக்கும் மதிய நேரம் அல்லது இரவில் சுத்தப்படுத்தலாமே?
அல்லது விடுமுறை நாட்களில் சுத்தப்படுத்தலாம். ஆனால் இவர்கள் செய்வதென்ன?
வடபழனி 100 அடி சாலை சாதரணமாகவே காலையில் போக்குவரத்து
நெரிசலில் பிதுங்கும். அதிலும் முகூர்த்த நாளன்று கேட்கவே வேண்டாம்.
ஆனால் சொல்லி வைத்தார்போல் முகூர்த்த நாளன்று காலையில்தான்
பாதி சாலையை அடைத்துக் கொண்டு கருமமே கண்ணாக வேலை செய்கிறார்கள்.
அது போன்ற நாட்களில் கோயம்பேட்டிலிருந்து கிண்டி செல்வதற்கு 1 மணி
நேரத்திற்கு மேலாகிறது.
உத்தரவிடும் உயர்ந்த பதவியிலிருப்பவர்களுக்கு மூளையே கிடையாதா?
அல்லது யோசிக்கவே மாட்டார்களா?
Thursday, November 29, 2007
ஒரு சென்னை வாசியின் புலம்பல்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
சரியாச் சொன்னீங்க.
///உத்தரவிடும் உயர்ந்த பதவியிலிருப்பவர்களுக்கு மூளையே கிடையாதா?
அல்லது யோசிக்கவே மாட்டார்களா?///
அதயெல்லாம் எதிர்பார்க்க கூடாது!!
அவிங்க ஆபீஸுக்கு போற ரோட்டுல தடை இருந்தாக்கா புரிஞ்சிருக்கும்...
// சென்னையின் மிகப்பெரிய பிரச்சனை போக்குவரத்து நெரிசல்.
கட்டப்பட்டு வரும் மேம்பாலங்கள் எப்போது முடிவடைந்து
எப்போது திறப்பு விழாகண்டு இந்தப்பிரச்சனை தீரும் என்று
தெரியவில்லை.//
இப்பவே கட்டி முடிச்சிட்டாக்கா.. எலக்ஸனுக்குள்ள மக்கள்ஸ் மறந்துடுவாய்ங்கள்ல.. அதனால எலக்ஸன் சமீபத்துவர இழுத்து, ஒரு பெருவிழா கொண்டாட்டத்தோட திறப்புவிழா வைச்சி ,ஓட்டு கேக்கலாமில்ல..
ரெண்டு கட்சி ஆட்சியுமே இங்கனதேனுங்க..
நான் இந்தகோணத்துல யோசிக்கவே இல்ல ரசிகன்.நம்ம தலையெழுத்து அவ்வளவுதான்.
அவ்்்்்
Post a Comment