சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தலைமை தேர்தல் அதிகாரி அமுதா, "நம் நாட்டில் 18 வயது முதல் 34 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தான் பெருமளவு வாக்களிக்காமல் உள்ளனர். 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் 90 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள். எல்லோரும் வாக்களிக்க வேண்டும். இல்லை என்றால் ஜனநாயகம் இருக்காது.
வெளிநாட்டில் புரட்சி நடப்பதை எல்லாம் பார்க்கிறோம். இளைஞர்களிடம் மனமாற்றம் வர வேண்டும்." என்று கூறினார்.
இது '49-ஓ போடுவது எப்படி?- அதிகாரி விளக்கம்' என்ற தலைப்பில் இன்று ஆனந்த விகடனில் வெளியாகியுள்ள செய்தி.
"மன மாற்றம் வர வேண்டும்" என்று பேசிய மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக புகார் கூறும் திமுக, தலைமை தேர்தல் அதிகாரி அமுதா மீதும் புகார் கூறுமா? அமுதாவையும் மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதுமா?
-----------------------------------------
நேற்று தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வட்டாட்சியர் காளிமுத்து அழகிரியின் ஆட்கள் தன்னை தலையில் தாக்கியதாகக் கூறினார்.
நேற்று இரவு என்ன நடந்ததோ தெரியவில்லை இன்று மாவட்ட ஆட்சியர் சகாயம் அவர்களின் தூண்டுதலால் பொய்புகார் கொடுத்ததாக விளக்க மளித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்துக்கு அவர் எழுதிய விளக்கக் கடிதம் கலைஞர் தொலைக்காட்சியில் காட்டப்படுகிறது.
தேர்தல் ஆணையத்துக்கு அவர் எழுதிய விளக்கக் கடிதம் கலைஞர் தொலைக்காட்சிக்கு எப்படிக்கிடைத்தது?
Monday, April 04, 2011
என்ன நடக்கிறது மதுரையில்?
பதிவர்:- நக்கீரன் நேரம் 7:12 AM 0 வாசகர் கடிதம்
Subscribe to:
Posts (Atom)